5 ஆண்டுகளில் 15 ஆயிரம் மசூதிகள் இடிப்பு, ஜி ஜின் பிங் அரசு அட்ராசிட்டி: இத கேட்க துப்பு இருக்கா பாகிஸ்தானுக்கு

அதுஷ் சுந்தாக்  கிராமத்தின் உய்குர் முஸ்லிம்களின் கமிட்டி தலைவர் கூறுகையில், கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஏற்கனவே கழிப்பறைகள் உள்ளன, இங்கு சுற்றுலாப் பயணிகளும் மிகக்குறைந்த அளவிலேயே வருகின்றனர்.

15 thousand mosques demolished in 5 years, Xi Jinping government atrocity,  Islamists are angry

சீனாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கு சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள மசூதிகளை இடித்துவிட்டு அந்நாட்டு அரசு பொதுக் கழிப்பறைகளை கட்டிவருவது இஸ்லாமியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.சீனாவில் ஜி ஜின்பிங் அரசாங்கம் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. சீனாவிலுள்ள உய்குர் முஸ்லிம்களின் மதநம்பிக்கையை மீது ஜீ ஜின்பிங் அரசாங்கம் தொடர்ந்து தொடர்ந்து தாக்குதல்  நடத்திவருகிறது. சின்ஜியாங் மாகாணத்தில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர்.முஸ்லிம் ஆதிக்கம் கொண்ட சின்சியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் மீதான அரசாங்க ஒடுக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் உய்குர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் முகாம் அமைத்து பயங்கரவாத பயிற்சிகளை  மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டி வரும் சீனா, கிட்டத்தட்ட அங்கு 20 லட்சம் உயிகுர் முஸ்லிம்களை முகாம்களில் தனிமைப்படுத்தி சித்திரவதை செய்து வருகிறது. 

15 thousand mosques demolished in 5 years, Xi Jinping government atrocity,  Islamists are angry

குறிப்பாக அவர்களின் மீது மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில்  சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள மசூதிகளை அரசாங்கம் இடித்து தரைமட்டமாக்கி விட்டு அங்கு கழிப்பறைகளை கட்டி வருவதாக உயிர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதுஷ் சுந்தாக்  கிராமத்தில் இருந்த மசூதிகளை இடித்துவிட்டு ஜி ஜின்பிங் அரசாங்கம் பொது கழிப்பறை கட்டி உள்ளது. அங்கு இதுவரை மூன்று மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற டோக்குல் மற்றும் அஜ்னா மஸ்ஜித்  இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. உள்ளூர் ரேடியோ ப்ரீ ஆசியா (ஆர் எஃப் ஏ) வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.  உய்குர்களை சீர்திருத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ள ஜி ஜின் பிங் அரசு இஸ்லாமியர்களின் அடையாளங்களை அழிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.  அவர்களின் அடையாளங்களாக உள்ள பெரிய அளவிலான மசூதிகள், தர்காக்கள் மற்றும் கல்லறையில் இடிக்கப்பட்டு வருகின்றன. 

15 thousand mosques demolished in 5 years, Xi Jinping government atrocity,  Islamists are angry

அதுஷ் சுந்தாக்  கிராமத்தின் உய்குர் முஸ்லிம்களின் கமிட்டி தலைவர் கூறுகையில், கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஏற்கனவே கழிப்பறைகள் உள்ளன, இங்கு சுற்றுலாப் பயணிகளும் மிகக்குறைந்த அளவிலேயே வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் டோக் குல் மசூதி இடித்து அந்த நிலத்தில் கழிப்பறை கட்ட வேண்டிய அவசியமில்லை. இதுவரை இந்த கிராமத்தில் மூன்று மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன. மசூதி இடிக்கப்படும் இடத்தில் கழிப்பறை,  மதுபான கூடம், சிகரெட் விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விஷயங்களுக்கு இஸ்லாத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து மசூதிகளை இடிப்பதும், அங்கு மாற்று கட்டிடங்களை  உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

15 thousand mosques demolished in 5 years, Xi Jinping government atrocity,  Islamists are angry

சின்ஜியாங் மாகாணத்தில் கிட்டத்தட்ட 70% மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன. மசூதிகளை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில், சீன அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 70%  மசூதிகளை இடித்துள்ளது. 2014 முதல் 2019 அக்டோபர் வரை இந்த பகுதியில் 45 கல்லறைகள் இடிக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் பூங்காக்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாஷிங்டனின் உய்குர் மனித உரிமைகள் அமைப்பு, தனது ஆய்வில் 2016 மற்றும் 2019 க்கு இடையில் சின்ஜியாங்கில் 15 ஆயிரம் மசூதிகள் மற்றும் ஆலயங்கள் இடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இது உலகளாவிய இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என நீலிக்கண்ணீர் வடிக்கும் பாகிஸ்தான், உய்குர் முஸ்லீகள் பாதிக்கப்படுவது குறித்து இதுவரை சீனாவிடம் கேள்வி கேட்கவில்லை. இதன் மூலம் பாகிஸ்தானின் இஸ்லாமிய பாச நாடகம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது வரை எந்த ஒரு இஸ்லாமிய நாடும் சீனாவை எதிர்க்க தெம்பில்லாமல் முடங்கி கிடப்பது கேளிக்கூத்தாகி உள்ளது. 


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios