அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள 50 மாநலங்களில் பல மாநிலங்கள் பாரம்பரியமாக குடியரசுக்கட்சிக்கு ஆதரவாகவும், பல மாநிலங்கள் பாரம்பரியமாக ஜனநாயகக்கட்சிக்கு ஆதரவாகவும் வாக்களித்து வருகின்றன.

அந்த மாநிலங்களில் இரு கட்சிகளில் ஒரு கட்சி உறுதியாக வெற்றி பெறும் என கணித்து உறுதியாகக் கூறிவிட முடியும். ஆனால், வெற்றியைக் கணிக்க முடியாத 15 மாநிலங்கள் உள்ளன. அதாவது ‘மதில் மேல் பூனை’ என்று கூறுவதைப் போல் எந்த நேரமும் இந்த மாநிலங்களின் முடிவு மாறலாம். இவை தான் வெற்றியை தீர்மானிக்கும் மாநிலங்கள் என அழைக்கப்படுகின்றன.

அவை நியூமெக்சிக்கோ, ஒஹியோ, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, உத்தா, விர்ஜினியா, விஸ்கான்சின், அரிசோனா, கொலராடோ, புளோரிடோ, ஜார்ஜியா, ஐயோவா, மிச்சிகன், நிவேடா, நியூஹேமிஸ்பியர் ஆகிய 15 மாநிலங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் மாநிலங்களாக கருதப்படுகின்றன.