Operation Ganga: 63 விமானங்களில் 13,300 இந்தியார்கள் மீட்பு... அசத்தும் ஆபரேஷன் கங்கா!!

ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் உக்ரைனில் இருந்து இதுவரை 63 விமானங்களில் சுமார் 13,300 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

13 thousand 300 indians rescued through 63 planes from ukraine by operation ganga till now

ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் உக்ரைனில் இருந்து இதுவரை 63 விமானங்களில் சுமார் 13,300 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்திவருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று 11வது நாளாக தாக்குதலை  தொடர்ந்து நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் உருகுலைந்தன. மேலும் பல உயிர்களும் பறிப்போயின. இந்த போதிலும் போர் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதை அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி வோல்னோவாகா, மரியுபோல் நகரங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் தற்காலிக போர் நிறுத்ததை ரஷ்யா அறிவித்தது.

13 thousand 300 indians rescued through 63 planes from ukraine by operation ganga till now

இதனிடையே கடுமையான போர் சூழல்  காரணமாக உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். உக்ரைன் வான்வெளியும் தடை செய்யப்பட்டிருப்பதால்  அபரேஷன் கங்கா திட்டம் மூலம், அங்குள்ள இந்தியர்களை தரை வழியாக அண்டை நாடுகளான உர்மேனியா, ஹங்கேரி, போலந்து  மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு அழைத்து வந்து, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் மத்திய அரசு இந்தியா அழைத்து வருகிறது. உக்ரைனில்  சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய விமான சேவை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவை தவிர இந்திய விமானப்படையும் இந்த மீட்பு பணியில் இணைந்துள்ளது.

13 thousand 300 indians rescued through 63 planes from ukraine by operation ganga till now

ஒரே நேரத்தில் அதிகப்படியானோரை அழைத்து வர ஏதுவாக விமானப்படையின் சி-17 ரக விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 63 விமானங்களில் சுமார் 13,300 இந்தியர்கள் தாய்நாடு திரும்பியுள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை இந்திய தனியார் விமான நிறுவனங்களின் 14 விமானங்கள் மூலம் 3,142  இந்தியர்களும், விமானப்படையின் மூன்று சி-17 ரக விமானங்கள் மூலம் 630 பேரும் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். நேற்று வரை மொத்தமாக 43 விமானங்கள் மூலம் 9,364 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 விமானங்கள் மூலம் சுமார் 2,900 பேர் இந்தியா வந்துள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் 13 விமானங்கள்  மூலம் 2200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்புவார்கள் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios