குட் நியூஸ்: கொரோனா வைரஸில் இருந்து மீண்ட 101 வயது முதியவர்... நிம்மதி பெருமூச்சு விட்ட இத்தாலி...!
இந்நிலையில் இத்தாலியில் 101 முதியவர் ஒருவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி இத்தாலி நாடு சின்னாபின்னமாகி வருகிறது. அந்நாட்டில் ஒரே நாளில் 683 பேர் பலியாகியுள்ளனர், இதன் மூலம் அங்கு உயிரிழப்பு 8,165 ஆக அதிகரித்துள்ளது, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80ஆயிரத்தை தாண்டியுள்ளது.
முதியவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் தான் இத்தாலியில் இத்தனை மரணங்கள் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இத்தாலியில் 101 முதியவர் ஒருவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
ரிமினி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 101 வயது முதியவர் தற்போது குணமடைந்துள்ளார். அந்நாட்டு ஊடகங்கள் அவரை மிஸ்டர் பி என்று அழைக்கின்றன. இந்த தகவலை அப்பகுதியின் துணை மேயரான குளோரியா லிசியும் உறுதிபடுத்தியுள்ளார்.
கோவிட் காய்ச்சலில் இருந்து குணமடைந்த அந்த நபரிடமிருந்து அனைவருக்குமான எதிர்கால நம்பிக்கையை உணர்வதாக தெரிவித்துள்ளார். மேலும் வயதான அந்த நபர் தீவிர வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.