100 years imprisonment for a youth who was sexually harassed by the 89-year-old woman
அமெரிக்காவில் மூதாட்டி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு மற்றும் கத்திமுனையில் பணத்தை கொள்ளையடித்த வாலிபருக்கு 100 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவில் சிகாகோ நகருக்கு அருகில் உள்ள வெஷ்மொன்ட் என்ற நகரில் 89 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இவர் தனியாக இருந்தபோது வீட்டினுள் நுழைந்த 23 வயது வாலிபர் ஒருவர் அந்த மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
மேலும் கத்தி முனையில் மூதாட்டியை காரில் ஏற்றி சென்று அவரது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இதுகுறித்த வழக்கு சிகாகோ புறநகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்கு 60 ஆண்டுகளும், பணத்தை கொள்ளையடித்ததற்கு 40 ஆண்டுகளும் மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
