ஈராக் திருமண விழாவில் 100 பேர் பலி; பட்டாசு வெடித்துக் கொண்டாடியபோது நடந்த விபரீதம்

திருமணத்தின்போது பட்டாசு வெடித்தது தான் தீ விபத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

100 Killed, Over 150 Injured In Fire During Wedding In Iraq: State Media sgb

வடக்கு ஈராக் நகரமான ஹம்தானியாவில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர்; 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த கோர விபத்து குறித்து தெரிவித்த நினிவே மாகாண சுகாதார அதிகாரிகள், "ஹம்தானியாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் இறந்துள்ளனர். 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை முதற்கட்ட தகவலில் கிடைத்துதான் என்றும் காயம் அடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை கூடலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

மொசூலுக்கு கிழக்கே கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் நகரமான ஹம்தானியாவில் இருக்கும் மருத்துவமனையில், சைரன்கள் முழங்க பல ஆம்புலன்ஸ்கள் வருவதையும், இரத்த தானம் செய்ய மருத்துவமனையில் ஏராளமானவர்கள் கூடுவதையும் காணமுடிந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

100 Killed, Over 150 Injured In Fire During Wedding In Iraq: State Media sgb

மண்டபத்திற்குள் எளிதில் பற்றி எரியக்கூடிய பொருள் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்ததாவும் பாதுகாப்பு தரக்கட்டுப்பாடுகள் மீறப்பட்டுள்ளதாகவும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலிவான விலை கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி போடப்பட்ட மண்டப கூரையின் பகுதிகள் தீ விபத்தால் விழுந்தன என்று சொல்கிறார்கள்.

"திருமணத்தின்போது பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தான் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும்" என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஈராக்கின் கட்டுமானம் மற்றும் போக்குவரத்து வசதிகளில் பாதுகாப்புத் தர நிர்ணயங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. மேலும் பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஈராக் நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்த நிலையில் உள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios