அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு... 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட் கட்டிடத்திற்குள் நுழைந்த மர்மநபர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். 

10 dead in mass shooting at New York supermarket

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட் கட்டிடத்திற்குள் நுழைந்த மர்மநபர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். 

10 dead in mass shooting at New York supermarket

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். மர்ம நபர் துப்பாக்கி சுட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த மர்ம நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனையடுத்து, அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios