Asianet News TamilAsianet News Tamil

வணக்கம் ஜி.. தமிழிசையை கண்டித்த அமித்ஷா.. வைரலாக்கும் அண்ணாமலை ஆதரவாளர்கள்.. என்ன காரணம்?

ஆந்திர முதல்வர் என் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் பாஜக மூத்த தலைவர் அமித்ஷா, தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கடுமையாக பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தி உள்ளது. தமிழிசை சௌந்தரராஜன் மேடைக்கு ஏறிச் சென்றார். முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு இடையே செல்லும் போது, அமித்​​ஷா தமிழிசையை திரும்ப அழைப்பதையும் வீடியோ காட்டுகிறது. 

பிறகு அமித்ஷா தமிழிசை சௌந்தரராஜனை நோக்கி கடுமையாக பேசினார். வணக்கம் என்று கூறிய தமிழிசையை அமித்ஷா கடுமையாக பேசும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்ணாமலை ஆதரவாளர்கள் இதனை பரப்பி, கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்தில் சமீபத்திய தேர்தல்களில் தோல்வியடைந்த விவகாரம் குறித்து தமிழிசை சௌந்தரராஜனும், அண்ணாமலையும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Amit Shah : அண்ணாமலையுடன் மோதல்..! தமிழிசையை நேரடியாக எச்சரித்த அமித்ஷா?

Video Top Stories