உலக புகழ்ப்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நாட்டியஞ்சலி நடைப்பெற்றது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நாட்டியஞ்சலியில் இந்த ஆண்டு உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்காக நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பரதநாட்டியக் கலைஞர்கள் கலந்து கொண்டு பரதம் ஆடினார். 

இதற்கு முன்னர் சென்னையில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 4 ஆயிரத்து 525 நபர்கள் கலந்துக்கொண்டது இதுவரை சாதனையாக இருந்தது.இந்த சாதனையை முறியடிக்கும் விதத்தில் இன்று சிதம்பரத்தில் நடைப்பெற்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக சிதம்பரம் நடராஜர் கோயிலில் 8000 பரதகலைஞர்கள் கலந்து கொண்டு நடமாடி உலக சாதனை படைத்து உள்ளனர்.