உங்கள் பழைய ஃபோனை புதிது போல மாற்ற வேண்டுமா ? கேமர்களுக்கான சூப்பர் டிப் !

கேமர்களுக்கு பழைய மொபைலில் டிஸ்பிளே, கேமின் வேகம் குறைவாக இருக்கிறது என்றால் அதை சரிசெய்வதற்கு ஸ்மார்ட்போனிலேயே ஒரு வழி உள்ளது. இதை பயன்படுத்தி எப்படி ஸ்மார்ட்போனின் வேகத்தை அதிகரிக்கலாம் என்பதை இங்கு காணலாம். 

Tips you should know that turn your old mobile to a new smartphone

கொரோனா காலத்தில் ஏராளமானோர் தங்களுக்கு விருப்பமான பல கேம்களை  விளையாடி மகிழ்ந்தனர் சிலர் தங்கள் முழு நேரத்தையும் கேம் விளையாடி அனுபவித்தனர். இவ்வாறு தமிழகத்திலும் கேமர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 

கேம்களை அடிக்கடி விளையாடுவதனால் உங்கள் மொபைலின் வேகம் மிகவும் குறைவதாக பல கேமர்களுக்கு கவலை இருக்கும். அவர்கள் ஒரு சில யுக்தியை கையாண்டாலே போதும்.  உங்கள் மொபைலின் டிஸ்பிளே சற்று பிரகாசமாக இருப்பதோடு கேமின் வேகமும் சற்று அதிகரிப்பதை நீங்கள் உணர்வீர்கள். இதற்கென்று எந்த ஒரு ஆப்பையும் நீங்கள் இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை.  நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போனில் ஒரு எளிதான வழி இருக்கிறது.
இதற்கு முதலில் உங்கள் மொபைலின் செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லவும். அதில் About Phone அல்லது About Device க்ளிக் செய்யவும். பிறகு சாஃப்ட்வேர் இன்ஃபர்மேஷனை க்ளிக் செய்யவும்.

மிகக்குறைந்த விலையில் Xiaomi Redmi Pad அறிமுகம்!

அதிலுள்ள பில்ட் நம்பரை உங்கள்  மொபைலுக்கு ஏற்ற முறையில் க்ளிக் செய்யவும். பின்னர்,  டெவலப்பர் ஆப்ஷனை செயல்படுத்த உங்களுக்கு விருப்பமான பின் அல்லது பேட்டன் அல்லது பாஸ்வேர்டை உள்ளிடவும். டெவலப்பர் ஆப்ஷன் இப்போது உங்கள் மொபைலின் செட்டிங்ஸ் பகுதியில் தோன்றும். அதில் ஃபோர்ஸ் ஃபோ எக்ஸ் MSAA என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

நீங்கள் இரவு நேரங்களில் சேட் செய்பவரா ? அப்படியானால் இந்த ட்ரிக் உங்களுக்கு கட்டாயம் பயன்படும்

இதன் மூலம் உங்கள் கேமின் வேகம் அதிகரிப்பதோடு உங்கள் மொபைலின் டிஸ்பிளே சற்று தெளிவாக இருக்கும். இதிலுள்ள சிறிய சிக்கல் என்ன என்றால் இதனை நீங்கள் பயன்படுத்தும்போது , உங்கள் பேட்டரி சற்று விரைவாக குறையும் வாய்ப்புகள் உள்ளன.  இதனால் இதற்கு முன்னர் இருந்த வேகத்தை விட அதிகமான வேகத்தில் உங்களுக்கு விருப்பமான கேமை ஸ்வாரஸ்யமாக நீங்கள் விளையாடி மகிழலாம்.அதோடு புதிய மொபைலில் விளையாடும் அனுபவமும் உங்களுக்கு கிடைக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios