Asianet News TamilAsianet News Tamil

Google Pay Tips: இது தெரியாம இவ்வளவு நாள் இருந்துட்டோமே!

Google Pay பயனராக நீங்கள்? உங்களுக்காகவே GPay செயலியில் உள்ள அட்டகாசமான இரண்டு அம்சங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 
 

Simple Google Pay Tips and Tricks, Hidden Features You Should Know
Author
First Published Sep 28, 2022, 3:02 PM IST

டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலிகளில் முன்னனி இடத்தில் Google Pay உள்ளது. வெறும் மொபைல் நம்பரை என்டர் செய்தாலே, உடனடியாக பணம் அனுப்ப முடியும் என்பதால் பெரும்பாலானோர் கூகுள் பே பயன்படுத்துகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்ப கூகுள் பே செயலியும் நாளுக்கு நாள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பல ஷார்ட்கட்கள், அம்சங்கள் உள்ளன.  அவற்றில் முக்கியமான, பயனுள்ள இரண்டு அம்சங்களைப் பற்றி இங்குக் காணலாம்.

Scan any QR Code

இந்த வசதியானது அடிக்கடி QR Code ஸ்கேன் செய்பவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். முதலில் மொபைலில் மெனுவில் சென்று GPay செயலியின் லோகோவை லாங் பிரஸ் செய்ய வேண்டும். அதில் வரும் முதல் ஆப்ஷனான ‘Scan any QR Code’ என்பதை உங்கள் ஸ்கிரீனில் ஹோம் பேஜில்  ஷார்ட் காட்டாக வைத்துக் கொள்ளவும். அவ்வளவு தான். இனி ஸ்கேன் செய்ய வேணடுமென்றால், இந்த ஷார்ட் கட் ஐகானை மட்டும் கிளிக் செய்து,  எளிமையாக பணம் அனுப்பலாம். 

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு !! 5G சோதனை முடிவுகள் வெளியானது

Split Bill

ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறோம். நண்பர்களுடன் உணவருந்தி விட்டு, ஹோட்டல் பில் செலுத்துகிறோம். இந்த பில் தொகையை செலுத்துவதில் நண்பர்களும் அவர்களது பங்கிற்கு பணம் செலுத்தினால் எளிமையாக இருக்கும் என்றால், அதற்கும் வழி உள்ளது. 

இன்டர்நெட் இல்லை என்றாலும் பணம் செலுத்தலாம்! வந்துவிட்டது UPI Lite

Gpay செயலியில் சர்ச் ஆப்ஷனை க்ளிக் செய்து அதில் கிரியேட் நியூ க்ரூப்பை க்ளிக் செய்யவும்.  அதில் உங்களுக்கு தேவையான நபர்களை ஆட் செய்து எவ்வளவு விலையோ அதை பதிவு செய்தால்  அது தானாகவே அவர்களுக்குரிய பணத்தை சரிசமமாக பங்கிட்டு அனுப்பி வைக்கும். 

சில சமயங்களில் அவர்கள் மறந்து விட்டாலோ அல்லது பணத்தை அனுப்பாமல் இருந்தாலோ கூட, அதையும் பார்க்கலாம், அத்துடன் ரிமைண்டர் அனுப்பும் ஆப்ஷனை பயன்படுத்தி அவர்களிடம் பணம் அனுப்பும்படி கேட்கலாம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios