Asianet News TamilAsianet News Tamil

WhatsApp Tips: லேப்டாப்பில் WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் செயலியானது ஆண்ட்ராய்டு, iOS, வெப் ஆகிய தளங்களில் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட வீடியோ கால், வாய்ஸ் கால் வசதியை வழங்குகிறது.

How to make a call on WhatsApp web desktop, check details here
Author
First Published Dec 13, 2022, 11:16 PM IST

சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ்அப்பில் பல்வேறு அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒன்று வாட்ஸ்அப் வீடியோ கால், வாய்ஸ் கால் அப்டேட் தான்.  வாய்ஸ் காலில் 32 பேர் வரையிலும், வீடியோ  காலில் 8 பேர் வரையிலு் பங்கேற்கலாம். 

ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் பெரும்பாலும் சாதாரண வழக்கமான கால்களை விட வாட்ஸ்அப் கால்களை தான் விரும்புகிறார்கள். இருப்பினும், சில பயனர்கள் வாட்ஸ்அப் வெப் தளத்தில் வாட்ஸ்அப் கால் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் இன்னும் கொஞ்சம் குழப்பமாக உள்ளனர். 

WhatsApp டெஸ்க்டாப் காலிங் அம்சத்திற்கு அடிப்படை தேவை:

Mac OS X 10.10 & அதற்கு மேல்

விண்டோஸ் 10 மற்றும் அதற்கு மேற்பட்டவை (64-பிட் பதிப்பு)
விண்டோஸ் 10 மற்றும் அதற்கு மேற்பட்டவை (32-பிட் பதிப்பு)

WhatsApp வாய்ஸ் கால், வீடியோ கால் செய்ய உங்கள் Microsoft ஸ்டோர் அல்லது Mac App Store இலிருந்து WhatsApp செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும். மேலும், வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் கால் செய்ய உங்கள் கம்ப்யூட்டரில் ஆடியோ அவுட்புட் டிவைஸ், மைக் ஆகியவை ஆன் செய்திருக்க வேண்டும். வாட்ஸ்அப் வெப் தளத்தில் குரூப் கால் செய்ய முடியாது, ஒரு நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே கால் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். 

Twitter Blue Subscription இன்று மீண்டும் அமல்: விலை, சலுகைகள், முழுவிவரங்கள் இதோ!

வாட்ஸ்அப் வெப் தளத்தில் வீடியோ கால், வாய்ஸ் கால் செய்வது எப்படி?

  • நீங்கள் கால் செய்ய விரும்பும் நபரின் சேட் திறக்கவும்.
  • அடுத்து வீடியோ கால் அல்லது வாய்ஸ் கால் ஐகானைக் கிளிக் செய்யவும்.
  • மைக்ரோஃபோன் ஐகானைக் கிளிக்  செய்து உங்கள் மைக்ரோஃபோனை ஆன் செய்யலாம் அல்லது ஆஃப் செய்யலாம். இதேபோல் கேமரா ஐகானைக் கிளிக் செய்து உங்கள் கேமராவை ஆஃப் அல்லது ஆன் செய்யலாம்.
     
Follow Us:
Download App:
  • android
  • ios