Asianet News TamilAsianet News Tamil

Instagram Tricks: இப்படி கூட ப்ளூ டிக் வாங்கிவிடலாம்?

இன்ஸ்டாகிராமில் நீல சரிபார்ப்பு பேட்ஜை (பொதுவாக ப்ளூ டிக் என அழைக்கப்படுகிறது) பெறுவதற்கான முறைகள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

How to get verified on Instagram, check meta verified details in tamil
Author
First Published Mar 4, 2023, 11:54 AM IST

டுவிட்டர், ஃபேஸ்புக்கைப் போல் இன்ஸ்டாகிராமிலும் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை குறிப்பிடும் வகையில் ப்ளூ டிக் வழங்கப்படுகிறது. 
ப்ளூ டிக் என்பது பயனர்கள் தாங்கள் பின்தொடர விரும்பும் மக்கள், பிரபலங்கள் மற்றும் பிராண்டுகளை எளிதில் அடையாளம் காணவும், கண்டறியவும் உதவுகிறது. இந்த ப்ளூ டிக் பெறுவதற்கு பல்வேறு கெடுபிடிகள், வரம்புகள் இருந்த நிலையில், இனி எளிமையான முறையில் வாங்கலாம்.  ஆனால் அதுவரை, பயனர்கள் வழக்கமான  முறையில் தான் செயல்பட வேண்டும். 

ப்ளூ டிக் பெறுவது எப்படி?

இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெறுவது எப்படி என்பதை தெரிந்துகொள்ளும் முன்பு, அது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வழக்கமான முறையின் மூலம் விண்ணப்பிப்பது என்பது ப்ளூ டிக் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இருக்காது. மேலும் பயனர்கள் எதிர்காலத்தில் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். உங்கள் தற்போதைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், 30 நாட்களில் மீண்டும் புதிய கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். ஆனால், அடிக்கடி விண்ணப்பித்தால் ப்ளூ டிக் கிடைக்காமலேயே போகலாம்.

இன்ஸ்டாகிராமில் குறைந்தது 10,000 ஃபாலோயர்ஸ் இருந்தால் தான் ப்ளூ டிக் கிடைக்கும் என்பதையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ உதவிப் பக்கத்தில் குறைந்தபட்ச பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பற்றி எதுவும் குறிப்பிடப்படாததால் இது துல்லியமாக இல்லை. 

இருப்பினும் ஒரு சிலருக்கு வெறும் 1000 பேர் ஃபாலோயர்ஸ் இருந்தால் கூட அவர்களுக்கு ப்ளூ டிக் கிடைப்பதாக கூறுகிறார்கள். இன்னும் சிலர் 1 லட்சத்திற்கும் மேலான ஃபாலோயர்ஸ் வைத்திருந்தும் அவர்களுக்கு ப்ளூ டிக் கிடைக்காத சூழலும் உள்ளன. 

இன்ஸ்டாகிராமில் நீல பேட்ஜுக்கான அடிப்படைத் தேவைகள்:

நீல சரிபார்க்கப்பட்ட பேட்ஜுக்கு விண்ணப்பிக்கும் முன், பயனர்கள் சில அடிப்படை விவரத்தை உறுதி செய்ய வேண்டும். முதலில், உங்கள் கணக்கு பொதுவில் இருக்க வேண்டும், சுயவிவரப் படம் இருக்க வேண்டும் மற்றும் இன்ஸ்டா கணக்கும் செயலில் இருக்க வேண்டும்.

"நன்கு அறியப்பட்டவராக, அதிகம் தேடப்பட்ட நபராக அல்லது நிறுவனமாக" இருக்க வேண்டும் என்று Instagram தரப்பில் குறிப்பிடுகிறது. பல வகைகளில் உள்ள கணக்குகளையும் இது சரிபார்த்து தான் ப்ளூ டிக் செய்கிறது.  கடந்த ஆறு மாதங்களில் செய்திக் கட்டுரைகளில் உங்கள் பெயர் பலமுறை குறிப்பிடப்பட்டிருந்தால், Instagram அதையும் ஒரு அங்கமாக எடுத்துக் கொள்கிறது.

ப்ளூ டிக் பெறுவதற்கான விண்ணப்பம்:

அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன், செயல்முறை மிகவும் நேரடியானது ஆகும். இந்த விண்ணப்ப செயல்முறையானது ஆண்ட்ராய்டு மற்றும் iOSக்கான Instagram பயன்பாட்டில் மட்டுமே கிடைக்கும்.

வழக்கமான முறை மூலம் விண்ணப்பிக்க, Instagram செயலியைத் திறக்கவும் > சுயவிவரத்திற்குச் செல்லவும் > மேல் வலது மூலையில் உள்ள ஹாம்பர்கர் ஐகானைக் கிளிக் செய்யவும் > அமைப்புகள் > கணக்கு > கோரிக்கை சரிபார்ப்பு என்பதற்குச் செல்லவும்.

பயனர்கள் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து ஒரு ஐடியை வழங்க வேண்டும். அவர்கள் தொடர்புடைய வகையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து விண்ணப்பிக்க வேண்டும். Instagram தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்த பிறகு, ப்ளூ டிக் தகுதிநிலை குறித்த விவரங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

விரைவில் மலிவு விலை Oneplus Nord CE 3 அறிமுகம்? விலை, சிறப்பம்ச விவரங்கள் லீக்!

நீங்கள் இதையெல்லாம் முயற்சி செய்தும், இன்னும் சரிபார்க்க முடியவில்லை என்றால், Meta Verified எனப்படும் சந்தா உள்ளது, அது விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளது. அந்த சந்தா வந்ததும் ஏதாவது ஒரு ஐடி கொடுத்து ப்ளூ டிக் பெறலாம். இப்போதைக்கு மெட்டா வெரிஃபைடு சந்தா என்பது ஆனது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மாதத்திற்கு $11.99 (சுமார் ரூ. 990) என்ற விலையில் கிடைக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios