Asianet News TamilAsianet News Tamil

Google Pay வாலெட்டில் பல வங்கி கணக்குளை இணைப்பது எப்படி?

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகள் வந்த பிறகு,  இந்தப் பிரச்சனையே இல்லை. பில் ரூ.10.50 என்று வந்தாலும் கூட, அதை அப்படியே டைப் செய்து, அதை அப்படியே கொடுத்துவிடுகிறோம். 

how to add multiple bank accounts in google pay
Author
First Published Sep 12, 2022, 10:37 AM IST

இந்தியாவில் 500,1000 ரூபாய் நோட்டுக்கு தடைக்கு விதிக்கப்பட்ட பிறகு பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பணபரிவர்த்தனை செயலிகளின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. பெட்டிக்கடை முதல், பெரிய மால் வரையில், QR Code மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வசதி வந்துவிட்டது. 

அமேசான் பே, போன் பே, கூகுள் பே, வாட்ஸ்அப் பே, பீம் செயலி என பலதரப்பட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகள் உள்ளன. இதன் மூலம் சில்லறை தட்டுப்பாடு என்ற பேச்சுமே குறைந்துவிட்டது. வழக்கமாக ஒரு கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, சில்லறை இல்லையென்றால், சாக்லேட் கொடுப்பார்கள், அல்லது அடுத்த முறை வரும் போது வாங்கிக் கொள்ளுங்கள் என்பார்கள். இன்னும் சில நேரங்களில் சில்லறைக்காக கலவரமே வெடித்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. 

ஆனால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகள் வந்த பிறகு,  இந்தப் பிரச்சனையே இல்லை. பில் ரூ.10.50 என்று வந்தாலும் கூட, அதை அப்படியே டைப் செய்து, அதை அப்படியே கொடுத்துவிடுகிறோம். 

இப்படியான சூழலில், பெரும்பாலானோர் பயன்படுத்தும் கூகுள் பே செயலியில் இருக்கும் பல அம்சங்கள் குறித்து பலருக்கு இன்னும் தெரியாமல் உள்ளது. அவற்றில் முக்கியமானது, பல வங்கிக் கணக்குகளை இணைப்பது. ஒரே செயலியில் பல வங்கிக் கணக்குகளை இணைப்பதன் மூலம், நாம் பணம் செலுத்தும் போது, எந்த வங்கிக் கணக்கில் இருந்து பணம் அனுப்பலாம் என்பதையும் தேர்வு செய்ய முடியும். 

கூகுள் பே செயலியில் பல வங்கிக் கணக்குகளை இணைக்கும் முறை:
1. முதலில் உங்கள் கூகுள் பே செயலியை திறக்க வேண்டும்
2. பேங்க் அக்கவுண்ட் என்பதைத் தட்டி, அதில், ஹாம்பர்கர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
3. Add Bank Account என்பதைத் தேர்ந்தெடுத்து, சேர்க்க வேண்டிய கூடுதல் வங்கிக் கணக்கின் விவரங்களை உள்ளிடவும்
4. புதிதாக சேர்க்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கான UPI குறியீடை உள்ளிடவும்
5. இந்த புதிய UPI குறியீடை நினைவில் வைத்திருக்கவும். வங்கிக் கணக்கிற்கு தொடர்புடை மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதையும் உள்ளிட்டு நிறைவு செய்யவும்.

அவ்வளவு தான். உங்கள் கூகுள் பே செயலியில் இன்னொரு வங்கிக் கணக்கையும் இணைத்தாகி விட்டது. இனி பணம் அனுப்பும் போது எந்த வங்கிக் கணக்கில் இருந்து பணம் அனுப்ப வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து, அதற்கான UPI குறியீடை உள்ளிட்டால் போதும். பணம் அனுப்பப்படும். 

Follow Us:
Download App:
  • android
  • ios