Asianet News TamilAsianet News Tamil

அடடே! இதத் தானே எதிர்பார்த்தோம்… வந்துவிட்டது கூகுளின் போட்டோ எடிட் அப்டேட்!

கூகுளின் மேஜிக் இரேசர் டூல் தற்போது ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு போட்டோவில் பின்புறத்தில் உள்ள தேவையற்ற பொருட்கள், நபர்களை எளிதாக அழிக்கலாம்.

Google Magic Eraser tool now accessible on any iPhone or Android, check details here
Author
First Published Mar 7, 2023, 9:47 AM IST

கூகுளில் போட்டோ செயலிகளைப் போலவே போட்டோவை எடிட்  செய்யும் செயலிகளும் உள்ளன. பிற செயலிகளைக் காட்டிலும் கூகுளின் செயலிகள் பயனர்களுக்கு தனித்துவமாகவும், எளிமையாகவும் இருக்கும் வகையில் பல்வேறு அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், தற்போது கூகுளின் மேஜிக் இரேசர் என்ற டூல் கொண்டு வரப்பட்டுள்ளது. இது அனைத்து பிக்சல் ஃபோன்கள், பிற தகுதியான ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது. வெறும் ஒருசில கிளிக்குளில் படங்களிலிருந்து தேவையற்ற விஷயங்களை அகற்றிவிடலாம். இதுவரையில் இந்த கருவி பிக்சல் ஃபோன்களுக்கு மட்டும் பிரத்யேகமாக இருந்து வந்தது.  இனி Google One மெம்பர்ஷிப் உள்ளவர்களும் Magic Eraser அம்சத்தை பயன்படுத்த முடியும்.

Google One என்பது ஒரு கிளவுட் ஸ்டோரேஜ் சேவையாகும், இது பயனர்களுக்கு கட்டண முறையில் 2TB வரை மெமரி வழங்குகிறது. இதன் அடிப்படைத் திட்டம் 100ஜிபி மெமரி பிளான் ஆகும். அதன் விலை  மாதத்திற்கு 130 ரூபாய். ஏற்கனவே இந்த பிளானை வைத்திருப்பவர்கள் கூகுள் போட்டோஸ் மூலம் மேற்கண்ட கருவியைப் பயன்படுத்த முடியும்.

இது தொடர்பாக கூகுள் தரப்பில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது,   ‘இன்று முதல், Google One உறுப்பினர்கள் — Android மற்றும் iOS இரண்டிலும் — அனைத்து Pixel பயனர்களும் Magic Eraser என்ற புதிய HDR வீடியோ எஃபெக்ட் அம்சங்களை பயன்படுத்த முடியும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3D நோட்பேட், வாட்ச் பட்ஸ்.. அடேங்கப்பா இவ்வளவு கேட்ஜெட்ஸ் வந்துவிட்டதா!

ஏற்கெனவே கூறியது போல், இந்த கருவி முதலில் பிக்சல் 6 சீரிஸ் மற்றும் பிக்சல் 7 ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக இருந்தது. இப்போது, பொது பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் ​​நிறைய பேர் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். பொதுவாக  ஒரு படத்தில் உள்ள வெளிச்சம் - இருட்டு இரண்டையும் சமநிலைப்படுத்த HDR எஃபெக்ட்டை நீங்கள் பயன்படுத்தலாம்.  அதே போல், இப்போது, ​​HDR எஃபெக்ட் மூலம் உங்கள் வீடியோக்கள் முழுவதும் பிரகாசத்தை, நிறங்களை மேம்படுத்த முடியும்.  

ஆண்ட்ராய்டு போன்கள் அல்லது ஐபோனில் மேஜிக் இரேசர் டூலை பயன்படுத்துவது எப்படி?

எந்தவொரு படத்தையும் எடிட் செய்யும் போது, ​​Google Photos செயலி மூலம் திறக்க வேண்டும். அதில் மேஜிக் இரேசர் என்ற கருவிகள் பகுதிக்குச் செல்ல வேண்டும். இருப்பினும் சில நேரங்களில் தானாகவே அதை கண்டறியும். அவ்வாறு மேஜிக் இரேசர் திறந்த பிறகு, தேவையற்ற பொருள்கள் அல்லது நபர்கள் இருக்கும் பகுதியை தேர்வு செய்து அதில் வட்டமிடவும். பின்பு தேவையான ஆப்ஷனை கிளிக் செய்து, தேவையற்றதை ரிமூவ் செய்து விடவும். அகற்றப்பட்ட பகுதியில் தானாகவே அதற்கு ஒத்த காட்சிகள், நிறங்களை உருவாக்கி கொள்ளும்.  கடைசியில், தேவையற்ற நபர், பொருட்கள் அந்த இடத்தில் இருந்த இடமே தெரியாமல் ஆகிவிடும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios