பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்து உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.தீபாவளி சிறப்பு சலுகையாக, தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துகொள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிகராக சலுகையை வாரி வழங்கி வருகிறது.

அதன்படி, ரூ.78 கான திட்டம்

அன்லிமிட்டேட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வீடியோ காலிங் வசதியும் வழங்கப்படுகிறது.மேலும் வீடியோ காலிங் சேவையை ஆக்டிவேட் செய்ய,  மொபைலில் ‘STV COMBO78’ என டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும் என்பது  குறிப்பிடத்தக்கது.

மேலும் மஹா தீபாவளி சலுகையின் கீழ் ரூ. 1699 மற்றும் ரூ.2099 விலையில் இரண்டு சலுகைகளை ஒரு வருட வேலிடிட்டியுடன் வழங்க உள்ளது என்பது கூடுதல் தகவல்  

ரூ.1,699 சலுகையில்..... 

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 
தினமும் 100 எஸ்.எம்.எஸ், 
தினமும் 2 ஜி.பி. டேட்டா 
 

ரூ.2,099 சலுகையில்
 
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 
தினமும் 100 எஸ்.எம்.எஸ், 
தினமும் 4 ஜி.பி. டேட்டா 

மேற்குறிப்பிட்ட இந்த சலுகையானது, தீபாவளி சிறப்பு சலுகையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.