ஈரோட்டை அடுத்த பெரியசேமூர் கல்லாங்கரட்டை சேர்ந்த செல்வக்குமார் விசைத்தறி  வேலை செய்து வருகிறார். இவரதுமனைவி லீலாவதி. செல்வக்குமாருக்கு, லீலாவதிக்கு . செல்வக்குமாரின் அண்ணி  லட்சுமி என்பவர். கடந்த  வாரம், தனது கணவரை விட்டு வேறொருவருடன்  ஓடிப் போய்விட்டார்.

இப்படி லட்சுமி வீட்டைவிட்டு போய்விட்டதால் குடும்ப மானம் போகிறதே என்று நினைத்த செல்வகுமார்,  தேடி பிடித்து, கடைசியில் சங்ககிரியிலிருந்து  லட்சுமியை மீண்டும் அவரது வீட்டுக்கு கூட்டி வந்துவிட்டார். இதனால் செல்வக்குமார்  மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார் லட்சுமி.

இந்நிலையில், நேற்று தன் செல்வகுமார் தனது மனைவி லீலாவதியுடன் வெளியில் சென்று லட்சுமி வீட்டு வழியே வந்து கொண்டிருந்தார். செல்வகுமாரை  பார்த்த லட்சுமி, வீட்டிலிருந்து ஓடி வந்து  வம்பிழுத்துள்ளார்.  "நான் ஜாலியாக என் கள்ளக் காதலனோடு இருந்தேன்,  என்னை ஏன் இங்கே கூட்டி வந்து இப்படி மாட்டி விட்டுட்டியே?  என சண்டைபோட்டுள்ளார். 

பின்னர் திடீரென லட்சுமி மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டையை எடுத்து செல்வக்குமாரை பயங்கரமாக தலையில் தாக்கினார். இதில் செல்வக்குமாருக்கு மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. பின்னர் சாலையோரம் கிடந்த ஒரு பெரிய கல்லை கொண்டு வந்து செல்வக்குமாரின் வலது காலில் போட்டார். வலி பொறுக்க முடியாமல் செல்வக்குமார் அலறி துடித்தார். அப்போதும் ஆத்திரம் அடங்காத லட்சுமி, செல்வக்குமாரின் மர்ம உறுப்பில் பலமாக எட்டி உதைத்தார். இப்போது செல்வக்குமார் சுருண்டு விழுந்து இறந்தே போய்விட்டார்.  லட்சுமி தனது கணவனை துடிக்க துடிக்க அடித்துக் கொன்றதை செல்வகுமாரின் மனைவி லீலாவதி  பார்த்து கதறித் துடித்துள்ளார். 

இந்த சம்பவம்  பற்றி அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். செல்வகுமார் உடலை கைப்பற்றி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கொடூரமாக அடித்தே கொன்ற லட்சுமி உறவினர்கள் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இப்படி செல்வக்குமாரை  லட்சுமியின்  உறவினர்கள் கொடூரமாக அடித்துக் கொன்றபோது ஒருவர் செல்போனில் எடுத்துள்ளார். அந்த வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.