wife killed her husband at thiruvaarur
நீடாமங்கலத்தில் நடுரோட்டில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள பெரம்பூரை சேர்ந்த தர்மராஜ். இருசக்கர வாகன மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே மாவட்டத்தில் உள்ள பவனூரை சேர்ந்த சுமதி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தரணிதரன் என்ற மகனும் நித்யா என்ற மகளும் உள்ளனர். தர்மராஜ் தினமும் மது அருந்தி விட்டு இரண்டாவது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நாளுக்கு நாள் அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல கடை தெருவிற்கு வந்த போது, இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது, நீடாமங்கலம் அண்ணா சிலை அருகே நடுரோட்டில் வைத்து கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து தர்மராஜ் கொலை செய்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கொலையாளி தர்மராஜை பிடித்து கட்டிவைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், தர்மராஜை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பரபரப்பு மிகுந்த பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் முன்னிலையில், நடைபெற்ற கொடூரமான இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
