நெய்வேலி,

நெய்வேலியில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால், கணவன் தூக்கிப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

நெய்வேலி வட்டம் 21–யைச் சேர்ந்தவர் மூர்த்தி (43). இவர் என்.எல்.சி. அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றினார். இவரது முதல் மனைவி இறந்து விட்ட நிலையில் திலகவதி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

மூர்த்தி தினமும் குடிப்பதை வாடிக்கையாகவும், குடித்துவிட்டு திலகவதியிடம் தகராறு செய்வதையும் தொடர்ந்த வண்ணம் இருந்தார்.

இந்த நிலையில் மூர்த்தி குடித்துவிட்டு வந்து வழக்கம்போல தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கோபமுற்ற திலகவதி குறிஞ்சிப்பாடி அருகே பொட்டவெளி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார்.

மனைவி வீட்டில் இருந்து சென்றுவிட்டதை தாங்கிக் கொள்ளமுடியாமல், மனமுடைந்த மூர்த்தி வீட்டில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி இருக்கும்போது தகராறில் ஈட்பட்டு கோபத்தீ மூட்டிய மூர்த்தி மனைவி இல்லை என்று தெரிந்ததும் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த தெர்மல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து திலகவதி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.