Asianet News TamilAsianet News Tamil

சென்னை சூளைமேட்டிற்கு திருநங்கை போலீஸ் எஸ்.ஐ-ஆக நியமனம்..! ஏன் தெரியுமா?

why transgender is appointed as police SI in chennai choolaimedu
why transgender is appointed as police SI in chennai choolaimedu
Author
First Published Oct 9, 2017, 5:23 PM IST


நாட்டிலேயே காவல்துறையில் முதன்முதலில் பணியில் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி. சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த இவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல்துறை உதவி ஆய்வாளருக்கான பணிக்கான தேர்வு எழுதி தருமபுரி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.

தற்போது பிரித்திகா யாசினி, சென்னை சூளைமேடு காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநங்கைகள் அதிகமாக வசிக்கும் பகுதி சென்னை சூளைமேடு. சூளைமேடு பகுதியில் அவ்வப்போது திருநங்கைகளால் பிரச்னைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் ஏற்கனவே எழுந்துள்ளன. போலீஸ் ஒருவருடன் திருநங்கைகள் சூளைமேடு பகுதியில் ஏற்கனவே ஒருமுறை சண்டையிட்டது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களும் திருநங்கைகளால் இடையூறு ஏற்படுவதாக குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், திருநங்கைகள் அதிகமாக உள்ள சூளைமேடு பகுதியில் திருநங்கை ஒருவரே காவல்துறை உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டிருப்பது, மற்ற திருநங்கைகளை நல்ல நிலைக்கு சென்ற வேண்டும் என்ற ஊக்குவிப்பை வழங்குவதாக இருக்கும். பிரித்திகா யாசினியை முன்னுதாரணமாகக் கொண்டு மேலும் பல திருநங்கைகள் அரசு பதவிகளுக்கும் உயர்பதவிகளுக்கும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். 

Follow Us:
Download App:
  • android
  • ios