Asianet News TamilAsianet News Tamil

உத்திரபிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தபடாதது ஏன்? - பா.சிதம்பரம் கேள்வி

Why natattapatatatu single phase elections in Uttar Pradesh? - Pacitamparam Question
why natattapatatatu-single-phase-elections-in-uttar-pra
Author
First Published Mar 12, 2017, 9:33 PM IST


உத்திரபிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தபடாதது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைப்பெற்ற தேர்தல்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையுடம் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், சென்னை அயனாவரத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

தேர்தல் முடிவை வைத்து ஒரு கட்சியின் எதிர்காலத்தை கணிக்க முடியாது.

உத்திரபிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தபடாதது ஏன்?

பிரித்தாளும் சூழ்ச்சியால் எப்போதும் பா.ஜ.கவுக்கு வெற்றி கிடைக்காது.

உத்திரபிரதேச மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.

மக்களை பாதுகாக்க காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இணைந்து போராட வேண்டும்.

நாடு முழுவதும் கவலை தரக்கூடிய அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios