who are all discontinuing the education inbeween they can get the amount

பல மாணவர்கள் சில பல காரணங்களால், தங்களது படிப்பை பாதியிலேயே விட்டுவிடும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் அவர்களது படிப்புக்காக செலுத்தப்பட்ட கட்டணத்தை, 7 நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது .

அதன் படி, பொறியியல் கல்லூரியில் படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை 7 நாட்களுக்குள், மாணவர்கள் திரும்ப பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும், மாணவர்கள் கல்லூரிக்கு வந்த நாட்களை கணக்கிட்டு மீதி கட்டணத்தை திருப்பி அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வகுப்புகள் தொடங்கும் முன்னரே கல்லூரியை விட்டு சென்றால் ரூ.1000 மட்டும் பிடித்தம் செய்து, மீதி கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், உத்தரவை மீறும் கல்லூரிகளுக்கு இருமடங்கு அபராதம் அல்லது உரிமம் ரத்து என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது .