Asianet News TamilAsianet News Tamil

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு காரணம் என்ன? – பிரபல ஜோதிட ரத்னா கணிப்பு....

What is the cause of the struggle of transport workers
What is the cause of the struggle of transport workers?
Author
First Published Jan 10, 2018, 1:24 PM IST


ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தி வருவதால் தற்போது தற்காலிக போக்குவரத்து பணியாளர்களைக்கொண்டு பேருந்தை இயக்கி வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து பேச்சு வார்த்தை நடந்தும் தோல்வியில் முடிகின்றது. இந்த போராட்டத்தால் தமிழகம் மொத்தமும் முடங்கியுள்ளது. மொத்தமாக 70% பேருந்துகள் இயங்கவில்லை.

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு காரணம் என்ன? ஜோதிர ரத்னா ஒருவர் இந்த போராட்டம் குறித்து கணித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

முண்டேன் அஸ்டிராலஜிப்படி இந்தியாவை பனிரண்டு ராசி மண்டலங்களாக பிரித்தால், தமிழ்நாடு மிதுன ராசியில் வருகிறது. ஆந்திராவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளும், கர்நாடகாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளும் மிதுன ராசியில்தான் வருகின்றன.

மேலும், முண்டேன் அஸ்டிராலஜிப்படி, மூன்றாம் பாவம் என்பது, போக்குவரத்து பயணிகள், சரக்கு வண்டிகள், பத்திரிகைகள், அண்டை நாடுகள், அரசு ஊழியர்கள் ஆகியவற்றை குறிக்கும்.

What is the cause of the struggle of transport workers?

அதன்படி, மிதுன ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு உரிய சூரியன், ஏழாம் இடத்தில் சனி பகவானோடு தனுசு ராசியில் அமர்ந்துள்ளார். தனுசு ராசியில் அமர்ந்துள்ள சனி பகவான், பத்தாம் பார்வையாக, மிதுன ராசிக்கு வாகன ஸ்தானமான, கன்னியை பார்வை செய்வதால், வாகனங்கள் இயக்கம் தடைபட்டுள்ளது. இந்த தடை ஜனவரி 15 ம் தேதிக்குள் முடிவுக்கு வந்து விடும்.

மிதுன ராசிக்கு மூன்றாம் இடம், போக்குவரத்து பயணிகளை குறிப்பிடுவதால், பயணிகளின் பயணம் தடைபட்டுள்ளது.

உலக நாடுகளை பனிரண்டு ராசி மண்டலங்களாக பிரிக்கும்போது, முண்டேன் அஸ்டிராலஜிப்படி, அமெரிக்கா மிதுன ராசியில் இடம் பெறுகிறது. ஒரு நாட்டின் ஒன்பதாம் பாவம் என்பது, அந்நிய நாடுகளின் உறவை குறிக்கும்.

What is the cause of the struggle of transport workers?

அதன்படி, மூன்றாம் இடத்து அதிபதியான சூரியன், தனுசில் சனியோடு சேர்ந்து அமர்ந்துள்ளதால், H 1 B விசா வழங்குவதை தடை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல், உலக நாடுகளின் ராசி மண்டல அமைப்பில், பாகிஸ்தான், மகர ராசியில் இடம்பெற்றுள்ளது. மகர ராசிக்கு தற்போது ஏழரை சனி நடைபெற்று வருகிறது.

மகர ராசியில் உள்ள பாகிஸ்தானுக்கு, இரண்டாம் இடம் கும்பம். அதன் பதிபதி சனி பகவான். எட்டாம் இடம் சிம்மம். அதன் அதிபதி சூரியன். இரண்டாம் இடமும், எட்டாம் இடமும், நிதி வரவை குறிக்கும் பணபர ஸ்தானங்களாகும்.

தற்போது, இரண்டாம் அதிபதியான சனியும், எட்டாம் அதிபதியான சூரியனும், மகரத்திற்கு பனிரண்டாம் இடமான தனுசில் அமர்ந்துள்ளன. பனிரண்டாம் இடம் வெளிநாட்டை குறிக்கும். அதனால், பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா வழங்கி வரும் நிதி நிறுத்தப்பட்டுள்ளது. என ஜோதிடர் திலகம் கணித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios