தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் எதிர்வரும் ஓரிரு நாட்களுக்கு மிதமானது முதல், அதிக கனத்த மழை வரை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு நல்ல மழை வெளுத்து வாங்கிய நிலையில், இன்று ஆகஸ்ட் 10ம் தேதி காலை முதலலேயே, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமானது முதல், அதிக கனத்த மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையிலும் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், ஆலந்தூர் மற்றும் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி தர்மபுரி, நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அண்ணாமலை நடை பயணத்திற்கு ஆதரவு.... ஆனால் பாஜகவிற்கு ஆதரவு இல்லை- விஜய பிரபாகர்

அதேபோல பிற மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது. இதனை எடுத்து இன்று சென்னை உட்பட்ட பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்த நிலையில் நாளை ஆகஸ்ட் 11ம் தேதியும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் அதிக கனத்த மழை வரை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அதேபோல வருகின்ற ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் கடும் வெளியில் வாட்டிய நிலையில், இப்பொது பெய்து வரும் மழை, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாடு முட்டியதில் காயமடைந்த குழந்தை ஆயிஷாவின் உடல்நிலை எப்படி உள்ளது.? மருத்துவர்கள் பரபரப்பு விளக்கம்