wearing Black clothes in eye advocates protest

அரியலூர்

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வழக்குரைஞர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து அரியலூர் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நேற்று கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற வளாகம் முன்பு நடந்த இந்தப் போராட்டத்திற்கு சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். 

இந்தப் போராட்டத்தில், "அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், "அரசு ஒதுக்கிய நிலத்தில் உடனடியாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உடனடியாக தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர். 

இந்தப் போராட்டத்தில் திரளான வழக்குரைஞர்கள் கலந்து பங்கேற்றனர். முடிவில் பொருளாளர் கொளஞ்சி நாதன் நன்றி தெரிவித்தார்.