வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பி.ஆர்.பாண்டியன் பாலாற்றில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 10 கிலோமீட்டர் தொலைவுக்கு நீரோட்ட பாதையை தடுக்கும் நோக்கோடு தண்ணீரில் மின் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வருகிற உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டேன் என்றார். 

மாவட்ட நிர்வாகத்திடமோ, பொதுப்பணித்துறையிட எவ்வித அனுமதியும் பெறாமல் மின்சார வாரியம் தன் விருப்பத்திற்கு பணிகள் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கதக்கது என பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். இதனை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

ராசிமணல் அணைகட்டும் பணியை தொடங்க வலியுறுத்தி விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து வலியுறுத்துவேன் என்றார். 

 பி.ஆர்.பாண்டியன் உடன் பொதுச்செயலாளர் பாலாறு Ac.வெங்கடேசன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மாநில துணை செயலாளர் எம்.செந்தில்குமார், திருவாரூர் மாவட்ட கவுரவ தலைவர் எம்.செல்வராஜ் ஆகியோர் உடன் இந்தனர்.