தமிழகத்தில் நடந்த 3 சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுகவா…? அதிமுகவா…? யார் முன்னிணி என்பது நாளை காலை 11 மணிக்கு தெரிந்துவிடும்.
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத் தேர்தல் நடந்தது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதிமுக தரப்பில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர், குஷ்பு உள்பட கூட்டணி கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரித்தனர். மேற்கண்ட தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறுவது என கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதில் சுமார் 11 மணிக்கு அனைத்து கட்டியின் வாக்குகளும் எண்ணப்பட்டுவிடும். அதன்பிறகு, முன்னிலையில் அதிமுகவா..? திமுகவா…? என தெரிந்துவிடும்.
