Vishal congratulates chennai police after arrested rowdy gang
சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியில் ரவுடிகளை கூண்டோடு பிடித்த சென்னை காவல்துறையினருக்கு நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் பிரபல ரவுடியின் பிறந்த நாள் விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது இதற்கு சென்னை சிட்டியில் உள்ள முக்கியமான ரவுடிகள் பங்கேற்றனர். இவர்கள் மீது கொலை, கொள்ளை ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளன.
இந்நிலையில், நேற்று ரவுடிகள் அனைவரும் ஒன்றாக கூடியிருப்பதாக போலீசார் தகவல் கிடைத்ததும். வாடகைக் காரில் மாறுவேடத்தில் சென்று ரவுடிகளை அலேக்காக கொந்தியது. கத்தி, அரிவாள் மதுபாட்டில், கார்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
.jpg)
இந்நிலையில், ரவுடிகள் கைது செய்யப்பட்டது குறித்து நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது; துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரே இடத்தில் கூடிய சமூக விரோதிகளை ஒரு ரகசிய நடவடிக்கை மூலம் சென்னை மாநகர காவல்துறை கைது செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இந்த துணிகர செயலுக்கு தலைமை வகித்த சென்னை மாநகர காவல் ஆணையர் திரு ஏ.கே.விஸ்வநாதன் அவர்களுக்கும் சிறப்பாக செயல்பட்ட துணை ஆணையர் திரு. சர்வேஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்படங்களில் கற்பனை காட்சிகளாக அமைக்கும் சாகசங்களை நிஜத்திலேயே காவல்துறையினர் நிகழ்த்திக்காட்டியிருப்பது அதி அற்புதமானது. இவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்! ஐ சல்யூட் தெம்! என்று கூறியுள்ளார்.
