அரியலூர்

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நலம் பெறவேண்டு என்று அரியலூரில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் விஜயகாந்த் பெயருக்கு சிறப்பு அர்ச்சனையும் செய்யப்பட்டது.

இந்த வழிபாட்டில் தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் ஜெயவேல், ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் எழிலரசன், சேகர், சரவணன், ஆரோக்கியராஜ், தர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கேப்டன் மன்ற துணைச் செயலாளர் செல்வம் செய்திருந்தார்.