தமிழக வெற்றி கழகம் சார்பில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று வெளியிட்டார். விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிப்பு..

தமிழகத்தில் அடுத்த மாதம் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிமுகம் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

கட்சியின் தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். விஜய் பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதி என இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் சென்னையிலேயேபோட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தி.நகர் தொகுதி, பொருளாளர் வெங்கட் ரமணன் மயிலாப்பூர் தொகுதி, தேர்தல் பிரசார பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம், தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.