நடிகை திரிஷா போன்ற திரையுலக பிரபலங்கள் தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, அறியாமல் வாய் துடுக்குடன் பேசுவதை தடுத்து நிறுத்த வேண்டும் இல்லையெனில் இங்கு தொழில் செய்ய முடியாது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு எதிரான பீட்டா அமைப்பில் உறுப்பினராக உள்ள நடிகை திரிஷா ஜல்லிக்கட்டு எதிரான கருத்து தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. 

திரிஷாவின் இந்த நடவடிக்கையை கண்டித்து காரைக்குடியில் நடந்த அவரின் படப்பிடிப்பில் ஜல்லிகட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி படப்பிடிப்பை ரத்து செய்ய வைத்தனர்.திரிஷா மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். 

இந்நிலையில் இன்று மீண்டும் ஜல்லிக்கட்டு எதிரானவர் என்பதை போல் பதிவு செய்துள்ள திரிஷா தனக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை நீங்கள் எல்லாம் தமிழர்கள் என்று சொல்வதற்கு வெட்கப்படுங்கள் என தெரிவித்து இருந்தார்.

தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்து சொல்லும் திரையுலக பிரபலங்கள் தங்கள் வாய் துடுக்குகளை நிறுத்தி கொள்ள வேண்டுமென வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த போட்டியில் இந்த மண்ணின் லட்சகணக்கான மக்களின் உழைப்பில் வரும் கோடிக்கணக்கான ரூபாய்  பணத்தை சம்பளமாக பெற்று பிழைப்பு நடத்தும், நடிகர் நடிகைகள், தமிழகத்தின் பராம்பரியம் பண்பாடு, கலாச்சாரம்,மண்ணின் தன்மை பற்றி அறியாமல் கண்டபடி கருத்து சொன்னால் தமிழகம் அவர்களை புறக்கணிக்கும்,

தொடர்ந்து இப்படி நடந்து வரும் தமிழர்களின் மன உணர்வை கொச்சைப்படுத்தும் திரிஷா மன்னிப்பு கேட்க வேண்டும், அப்படி அவர் கேட்கவில்லை என்றால் தமிழகத்தில் அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும் தமிழர் பராம்பரியம் பற்றி இது போன்ற கருத்து என்ற பெயரில் வாய் துடுக்குடன் பேசி வரும் சினிமா நடிகர் நடிகைகளை நடிகர் சங்கம் அடக்கி வைக்க வேண்டுமென வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.