வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் 3-ல் இருக்கும் கலிதீர்த்த அய்யனார் கோயில் பூசாரி தான் கலிதீர்த்தான். அருள்வாக்கு சொல்லும் இவர் , இந்ததேதியில் இந்த குழந்தைபிறக்கும் என சரியாக  கணித்து சொல்கிறாராம். இவரை பற்றி அறியாதவர்கள் அப்பகுதியில் யாரும் இருக்க  முடியாது .

இதானாலேயே வெள்ளி செவ்வாய் கிழமைகளில் அதிக கூட்டம் வருகிறதாம் இந்த கோவிலுக்கு.

குழந்தை வரம்

இந்த கோவிலை பொறுத்தவரை  குழந்தை  இல்லாத  தம்பதிகள்  ஏராளமானோர்  வந்து  குழந்தை  பாக்கியம்  பெறுகின்றனர்.கலிதீர்த்தான் அருள்வாக்கின் போதே , அடுத்தாண்டு ஆணி மாத  புதன்கிழமையில் குழந்தை பிறக்கும் “ –  இதுபோன்று ஒவ்வொரு தம்பதியினருக்கும் மாதமும் கிழமையும் முன்கூட்டியே சொல்லிவிடுகிறார் கலிதீர்த்தான்.

அவ்வாறு குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியினர் ஏராளமானோர்,அந்த கோவிலில் குழந்தை சிலையை வைத்துவிட்டு செல்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல், திருமணம் நடைப்பெறுவதற்காகவும், உடல்நிலை சரியில்லை என கோவிலுக்கு வந்து தங்களது வேண்டுதலை வைத்து, நேர்த்திகடனை செய்கிறார்கள்

இதுபோன்று வேண்டியவர்கள், பெரும்பாலான மக்களுக்கு வரம் கிடைத்துவிட்டதால், குழந்தை பொம்மை வைத்தும்,மனித உருவபொம்மை வைத்தும் நேர்த்திக்கடன் செய்துள்ளதால், பார்க்கும் இடமெல்லாம் நேர்த்திகடன் செய்த  பொம்மைகளாகவே  காணப்படுகிறது.

எது எப்படியோ, இந்த கோவிலுக்கு வந்து சென்றாலே மனதிற்கு நிம்மதி கிடைக்கும் என்பதை  மக்கள் ஆணித்தரமாக நம்புகிறார்கள்