வங்கக்‍ கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு. பாலசந்திரன், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் 'வார்து' புயல், கரையை கடக்கும் முன், வலுவிழக்கும் என தெரிவித்தார். விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 990 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல், மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக கரையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இன்றோ அல்லது நாளையோ வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை மறுதினம் நெல்லூர் மற்றும் காக்கிநாடாவுக்கு இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புதாகவும் திரு. பாலச்சந்திரன் தெரிவித்தார்.