Vadapalani apartment fire 4 dead bodies were handed over to the relatives
சென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயரிழந்த 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னையில் உள்ள வடபழனி தெற்கு சிவன் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியிலும் தூங்கி கொண்டிருந்த மக்களை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தால் குடியிருப்பு பகுதி முழுக்க புகை மண்டலமாக கட்சி அளித்தது. இதனால் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
காயமடைந்தவர்களை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி, சஞ்சய், செந்தில், சந்தியா ஆகியோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
