Asianet News TamilAsianet News Tamil

அமெரிக்க 'ஜெனரல் மோட்டார்ஸ்' தலைமை நிதி அதிகாரியாக சென்னை பெண்...

US General Motors - Chennai Girl as Chief Financial Officer
US 'General Motors' - Chennai Girl as Chief Financial Officer
Author
First Published Jun 14, 2018, 3:17 PM IST


அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தலைமை
செயல் அதிகாரியாக பதவியேற்க உள்ளார்

திவ்யா சூர்யதேவாரா (39), சென்னை பெண்னான இவர் தற்போது அமெரிக்காவின் நிறுவனத்தில் தலைமை பொறுப்பு ஏற்கின்றார்.

US 'General Motors' - Chennai Girl as Chief Financial Officerசென்னை பல்கலைகழகத்தில் வர்த்தக படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பினை முடித்த திவ்யா சூர்யதேவாரா, தனது MBA படிப்பிற்காக
அமெரிக்காவிற்கு சென்றார். அப்போது அவருக்கு வயது 22. பின்னர் தனது 25-வது வயதில் அமெரிக்காவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில்
பணிக்காக இணைந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் நிதி பிரிவின் துணை தலைவராக திவ்யா செயல்பட்டு வருகிறார். கடந்த 13 ஆண்டுகளாக
இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், தற்போது இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பினை ஏற்கின்றார். தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சக் ஸ்டீவன்ஸ்-க்கு பதிலாக தற்போது திவ்யா பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

US 'General Motors' - Chennai Girl as Chief Financial Officerவரும் செப்டம்பர் 1 ஆம் நாள் இவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திவ்யா, தனது பணிகாலத்தின்போது குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர் என்றும் இப்பதவிக்கு அவர் தகுதியானவர் என்றும் ஜெனரல் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios