திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் போறீங்களா.! முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கம்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி,  சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் விழுப்புரம், வெங்கடேசபுரம், திருக்கோவிலூர், தண்டரை வழியாக திருவண்ணாமலையை வந்து சேரும்.

Unreserved Special train operation for Thiruvannamalai Pournami Girivalam KAK

திருவண்ணாமலை கிரிவலம்

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிவாகும். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பலவேறு மாநிலங்கள் மற்றும் பல நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.  இந்த கோயிலில்  சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். அதன் படி இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில்பௌர்ணமி அன்று மிகவும் விஷேசமாகும். அந்த வகையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று  அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு செல்வது வழக்கம். 

Unreserved Special train operation for Thiruvannamalai Pournami Girivalam KAK

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்

அந்த வகையில ஜனவரி 13ஆம் தேதி பெளர்ணமி தினத்தையோட்டி ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பாரக்கப்படுகிறது. இதனையடுத்து பக்தர்கள் வசதிக்காக  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த நிலையில்  பௌர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கும்,  திருவண்ணாமலையில்  இருந்து விழுப்புரத்திற்கும்  முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜனவரி 13ஆம் தேதி காலை 9 25 மணிக்கு (ரயில் எண் 06130) விழுப்புரத்திலிருந்து ரயில் புறப்படும் எனவும் திருவண்ணாமலைக்கு காலை 11 மணி 10 நிமிடங்களுக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Unreserved Special train operation for Thiruvannamalai Pournami Girivalam KAK

சிறப்பு ரயில் இயக்கம்

மறு மார்க்கத்தில்(ரயில் எண் 06129)  திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு முன்பதிவு செய்யப்படாத ரயிலானது மதியம் 12 40 மணிக்கு இயக்கப்படும் எனவும் இந்த ரயிலானது அன்று மதியம் 2:15 மணிக்கு விழுப்புரத்திற்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்காக இயக்கப்படவுள்ள இந்த சிறப்பு ரயிலானது விழுப்புரம், வெங்கடேசபுரம், திருக்கோவிலூர், தண்டரை வழியாக திருவண்ணாமலையை வந்து சிறப்பு ரயில் சேர்கிறது என கூறப்பட்டுள்ளது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios