கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளியில் மோட்டார் சைக்கிள்கள் எதிரெதிரே வந்த இருவர் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மாரசந்திரத்தைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (25).

இவர் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் ஊருக்கு வந்திருந்த அவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் குருபரப்பள்ளி அருகே உள்ள குப்பச்சிப்பாறை பக்கமாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது மேலுமலையைச் சேர்ந்த ஜீனப்பா (55) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். குப்பச்சிப்பாறை அருகில் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் ராஜீவ்காந்தி மற்றும் ஜீனப்பா ஆகிய இருவரும் பலத்த காயத்தோடு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி காவலாளர்கள் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று பலியான இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக குருபரப்பள்ளி காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேர்கொண்டு வருகின்றனர்.