திட்டச்சேரி,
திட்டச்சேரி வழியாக 120 லிட்டர் சாராயம் கடத்தி வந்த மூவரை காவலாளர்கள் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனத்தையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து திட்டச்சேரி வழியாக பல்வேறு பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக திட்டச்சேரி காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா ஆத்மநாபன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகையன், ஏட்டு தியாகராஜன் ஆகியோர் வாழ்மங்கலம் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து வந்த இரு சக்கர வாகனத்தை மறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது.
அவர்களை விசாரித்ததில் அந்த நபர் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த தனிக்கொடி மகன் சுந்தரபாண்டியன் (33) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் சுந்தரபாண்டியனை கைது செய்து, அவரிடம் இருந்த 100 லிட்டர் சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து அந்த வழியாக மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மேலும் இரண்டு பேரை காவலாளர்கள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அரியலூர் மாவட்டம் எரிஞ்சிக்கோரை பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் கார்த்திகேயன் (28), அரியலூர் மாவட்டம் பெரியநகத்தூர் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் அரவிந்த் (22) என்பதும் தெரிந்தது. இவர்கள் இருவரும் 20 லிட்டர் சாராயம் கடத்தி வந்தனர்.
இதையடுத்து காவலாளர்கள் அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை கைப்ப்ற்றியனர்.
இவர்கள் மூவரும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவர்கள் மூவர் மீதும் திட்டச்சேரி காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்தனர்.
