தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்! த.வெ.க. தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து!

TVK Vijay Pongal Wishes: தமிழக மக்களுக்கு நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் வெற்றிப் பொங்கல் பொங்கட்டும் என்றும், தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

TVK Thalapathy Vijay Pongal greetings 2025 sgb

இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம் என்று கூறி, தமிழக மக்களுக்கு நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

த.வெ.க.வின் பக்கத்தில் விஜய் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

"பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.

பிரதமருக்கு முதல்வர் கடிதம்; 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.1,056 கோடி விடுவிக்க கோரிக்கை

2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!

இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!"

இவ்வாறு த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய் கூறியுள்ளார்.

கிராஜுவிட்டி கணக்கிடுவது எப்படி? 5, 7, 10 ஆண்டு சர்வீஸுக்கு பணிக்கொடை எவ்வளவு?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios