சென்னை மடிப்பாக்கத்தில் டெலிவிஷன் தலையில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக பலியானது.
சென்னை மடிப்பாக்கம் மூவரசன்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில் நாதன். இவரது 1½ வயது பெண் குழந்தை நித்திஷா.நேற்று முன்தினம் இரவு செந்தில் நாதன் தனது குடும்பத்துடன் அமர்ந்து இருந்தார். அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நித்திஷா ‘டி.வி. ஸ்டான்டை’ பிடித்து எழுந்தாள்.
திடீரென டி.வி. ஸ்டாண்டு சரிந்து, அதன் மேல் இருந்த டிவி குழந்தையின் தலை மீது விழுந்தது. இதில் நித்திஷாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்து போனது. இந்த சம்பவம் தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
