கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பெற்றோரை கொன்று விட்டு டிராவல்ஸ் அதிபர் தற்கொலை!

கோவையில், கடன் தொல்லையால் பெற்றோரை கொன்றுவிட்டு, இளம் டிராவல்ஸ் அதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, உறவினருக்கு வீடியோ ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

Travels owner suicide

கோவையில், கடன் தொல்லையால் பெற்றோரை கொன்றுவிட்டு, இளம் டிராவல்ஸ் அதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, உறவினருக்கு வீடியோ ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார். கோவை ஆவாரம்பாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பாலமுருகன் (55); அவரது , மனைவி லட்சுமி (47); இவர்களின் மகன் வைரமுத்து (28). பாலமுருகன், தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர். வைரமுத்துவுக்கு திருமணமாகவில்லை. இவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தார்.

 Travels owner suicide

தொழில் நஷ்டத்தால் பலரிடம் கடன் வாங்கிய வைரமுத்து, அதை திருப்பி செலுத்த முடியாமல் திணறினார். இதற்காக தற்கொலை செய்து கொண்டால், பெற்றோர்களும் கஷ்டப்படுவார்கள் என்று நினைத்த அவர், பெற்றோரை கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி, தாய், தந்தை இருவரின் மணிக்கட்டை கத்தியால் அறுத்து, அவர்களின் கழுத்தையும் அறுத்து, வைரமுத்து கொலை செய்தார். பிறகு, தனது மணிக்கட்டையும் கத்தியால் வைரமுத்து அறுத்து கொண்டார். எங்கே உயிர் பிழைத்துவிடுவோமோ என்று கருதிய அவர், அதன் பின், மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டது, காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. Travels owner suicide

அதற்கு முன்பாகவே, தனது சொத்து ஆவணங்கள், கடிதம் மற்றும் வீடியோ பதிவை, திருப்பூரில் உள்ள தனது சித்திக்கு கூரியர் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அதை வாங்கிய அவர், கடிதத்தை பார்த்து பதறிப்போய், பீளமேடு காவல்துறைக்கு தகவல் தந்துள்ளார். தற்கொலைக்கு முன்பாக, தனது முகநூல் கணக்கையும், வைரமுத்து அழித்துள்ளார். இச்சம்பவம், கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios