மத்திய அரசை கண்டித்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அதன்படி, முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க.செயலாளருமான பொன்முடி தலைமையில் விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து திமுகவினர் மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.