நாளை ஞாயிற்றுக் கிழமை விப்ரோ சென்னை மாரத்தான் ஓட்டம்- 2017 சென்னையில் நடைபெற உள்ளதால், காலை 04.00 மணி முதல் 10.00 மணிவரை டைடல் பார்க்கில் இருந்து ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் போக்குவரத்து காவல் துறையினரால் செய்யப்பட்டுள்ளன.
1.    பழைய மகாபலிபுரம் சாலையில் மத்திய தொழில்நுட்பக் கல்லூரி சிக்னல் முதல்  டைடல் பார்க்  வரை வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது. 
    பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து டைடல் பார்க்  நோக்கி வரும் வாகனங்கள் புதிய பாலம்  சிக்னலில் திருப்பி திருவான்மியூர் சந்திப்பு, இடது புறம் திரும்பி எல்.பி சாலை சந்திப்பு-வலது அல்லது இடது புறமாகவோ திரும்பி சேரவேண்டிய இடத்திற்கு செல்லலாம்.
டி.    காந்தி மண்டபம் சர்தார் வல்லபாய் பட்டேல்  சாலையிலிருந்து பழைய மகாபலிபுரம் (ஓ.எம்.ஆர்) சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் நேராக அடையாறு சிக்னல் சந்திப்பு-வலது புறமாக திரும்பி எல்.பி.ரோடு-திருவான்மியூர் சந்திப்பு வழியாக சேர வேண்டிய இடத்திற்கு செல்லலாம்.
2.    சுவாமி சிவானந்தா சாலை முழுவதும் வாகன போக்குவரத்திற்கு  தடை செய்யப்படுகிறது.
3.    வடசென்னை பகுதியிலிருந்து அடையார் நோக்கி வரும் வாகனங்கள் பாரிமுனையில் திருப்பி விடப்பட்டு என்.எஸ்ஸி.போஸ் ரோடு-ஈவ்வினிங்; பஜார் ரோடு - இ.வெ.ரா சாலை - ஸ்டான்லி வியாடக்ட் மேம்பாலம் -அண்ணா சாலை - ஜி.பி.ரோடு - இராயப்பேட்டை மணிக்கூண்டு- இராயப்பேட்டை அரசு மருத்துவமனை சிக்னல் - இராயப்பேட்டை நெடுஞ்சாலை - லஸ் சிக்னல் - மந்தைவெளி - பிராடில் கேஸ்டில் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லலாம்.
4.     மத்திய தொழில்நுட்ப கல்லூரி சிக்னல் மற்றும் அடையாரிலிருந்து உழைப்பாளார் சிலை வரை வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம்.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.