too hot in this week
உயிர்பலி வாங்கக்கூடிய “வெயில்”….இந்தவாரம் இந்தியாவிற்கு பேராபத்து...! வானிலை மையம் எச்சரிக்கை
கோடை காலம் தொடங்கியது வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுவாகவே கோடை வெப்பம் என்றால் அது சுட்டெரிக்கும் மே மாத வெப்பமாக தான் இருக்கும். ஆனால் இன்றைய காலக் கட்டத்தில் பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கும் போதே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொகங்கியுள்ளது .
இந்நிலையில் சென்ற வாரம் உலக வானிலை ஆய்வு மையம் மற்றும் ஆஸ்திரேலிய ஆய்வு மையம் இவை இரண்டும் பூமி எந்த அளவிற்கு வெப்பம் அடைந்துள்ளது ? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன “எல் நினோ” எனப்படும் கால நிலை மாற்றம் குறித்த அனைத்து தகவலையும் தெரிவித்து , எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கால நிலையில் பெருத்த மாற்றம் இருக்கும் என்று தெரிவித்து இருந்தது .
இதன் மூலம் உலக அளவில் காலநிலை மாற்றம் பெரிதும் பாதிக்கும் என தெரிகிறது.இந்நிலையில், டெல்லி வானிலை ஆய்வு மையம் தற்போது இந்தியாவில் நிலவக்கூடிய தட்ப வெட்ப நிலை பற்றி விரிவாகதெரிவித்துள்ளது .
இதன் காரணமாக அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வெயில் கொளுத்தும் என்றும் , அதனால் உயிர் பலி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இதன் காரணமாக இந்தியா முழுவதும், பொதுவாகவே 100 டிகிரி செல்சியஸ்கும் மேலாக வெப்பம் இருக்கும் என்றும்,குறிப்பாக மத்திய பிரதேசம்,சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 110 – 115 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் காரணமாக தண்ணீர் ஆவியாதல் நிகழ்வு அதிக அளவு ஏற்பட்டு , ஏரி குளங்களில் தண்ணீர் இல்லாமல் வற்றி, குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் போகும் அவல நிலை ஏற்படவாய்ப்புள்ளதாக எச்சரிக்கை மணி கொடுத்துள்ளனர் வானிலை ஆய்வு அதிகாரிகள்.
எனவே வெயில் அதிகமாக இருக்கும் போது பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்றும், இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி செய்வதற்கு மாநில அரசு தயாராக இருக்க வேணும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 2040 பேர் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
