பலத்த மழை எச்சரிக்கை காரணமாக நாளை சென்னை மாவட்டடத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று உள்ளதால் இன்று காலை முதலே சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று இரவு முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நிலவும் என்றும்,சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் நாளை சென்னை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

இதே போன்று, புதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக சென்னை சீர்மிகு சட்டப்பள்ளி, தமிழகம் முழுவதும் உள்ள சட்டக்கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சட்டப்பல்கலை துணை வேந்தர் தெரிவித்து உள்ளார் .