இந்த தக்காளிக்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? ரோட்டில் என்னா பாடுபடுது பாருங்க
தக்காளி விலை வீழ்ச்சியால் தருமபுரியில் சாலையோரங்களில் அவை கொட்டப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
தக்காளி விலை வீழ்ச்சியால் தருமபுரியில் சாலையோரங்களில் அவை கொட்டப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
சமையலுக்கு முக்கியமான அயிட்டங்களில் முதன்மையானது தக்காளி. ஒரு காலத்தில் எக்கச்செக்க விலைக்கு விற்கப்பட்ட தக்காளியின் நிலைமையின் இந்த அந்தோ பரிதாபம் என்ற கதையாக இருக்கிறது.
தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தக்காளி அதிகளவு பயிரிடப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு ஒரு கிலோ தக்காளி 25 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால் இப்போதோ நிலைமை உல்டாவாகி ஒரு கிலோ தக்காளி 6 ரூபாய்க்கு வந்து நின்றிருக்கிறது.
அதிகபட்சம் ஒரு கிலோ தக்காளி 8 ரூபாய்க்கு தான் விற்கப்படுகிறது. தக்காளி விலை ஒட்டுமொத்தமாக சரிந்துள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து போயிருக்கின்றனர்.
விதைப்பு கூலி, ஆள் பறிப்பு கூலி, வண்டி வாடகை உள்ளிட்டவற்றுக்கு இந்த விலை கட்டுப்பாடியாகாததால் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்ட தக்காளிகள் கடைசியாக சாலையோரங்களில் கொட்டும் நிலைமை காணப்படுகிறது.
ஒரு பக்கம் உண்ண உணவின்றி ஒரு கூட்டம் தவிக்க மறுபக்கமோ இப்படி விளைவிக்கப்பட்ட பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் ரோட்டில் கொட்டப்படும் நிலைமையை கண்டு மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.