Asianet News TamilAsianet News Tamil

Asani : அசானி புயல் எதிரொலி.. 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

Asani : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

Today heavy rains in tamilnadu said that chennai imd reason for asani storm
Author
Tamilnadu, First Published May 13, 2022, 7:35 AM IST

வங்கக் கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சீக்கிரம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த அது, புயலாகவும் வலுப்பெற்றது. இந்த புயலுக்கு அசானி என்று பெயரிடப்பட்டது. மேலும், இந்த புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிர புயலாக வலுப்பெற்றது. 

Today heavy rains in tamilnadu said that chennai imd reason for asani storm

முதலில் வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்த அசானி புயல், மெல்ல அது மத்திய மேற்கு மற்றும் அதனை ஓட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்குச் சென்றது.  வடகிழக்கு திசையில் நகர்ந்து வந்த இந்த அசானி புயல், திடீரென வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது.  இதன் காரணமாக ஆந்திராவின் வட கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கனமழையானது பெய்தது. 

Today heavy rains in tamilnadu said that chennai imd reason for asani storm

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவாரூர், நாகை ,நீலகிரி,திருப்பூர்,கோவை என 15 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios