தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கொட்டித்தீர்த்தது. இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. 

குமரி கடல் பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

இன்று தென் தமிழக மாவட்டங்கள் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் , கடலூர், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நாளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல் ,நீலகிரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.