தமிழகத்தின் சில பகுதிகளிலும் புதுச்சேரியிலும் இன்று பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. ஓடைகளில் இருந்து வெளியேறிய கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் வெளியேறியதால், சாலையில் நடந்து செல்வோர் கடும் சிரமம் ஆளாகினர். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியிலும் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த ஒருமாத காலமாக வெயில் வாட்டி வந்த நிலையில், விவசாயிகளும் பொதுமக்களும் மழையால் மகிழ்ந்தனர்.

இந்நிலையில், வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என வானிலை அறிவித்துள்ளது. அதிலும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.