To drive away and drive away ... .Wellmandi Natarajan ...
டி.டி.வி.தினகரனை அதிமுகவில் இருந்து விலக்கி வைப்பதற்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை, தினகரன் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு, ராஜினாமா செய்ய வற்புறுத்தியதால் அங்கிருந்து தப்பி ஓடினார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுகவை சசிகலா கைப்பற்றினாலும், பின்னர் ஓபிஎஸ் அவருக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அக்கட்சி இரண்டாக உடைந்தது.

சசிகலா தரப்பு அணியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆக்கப்பட்டார். இது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், 122 எம்எல்ஏ க்கள் எடப்பாடி பழடினசாமிக்கு ஆதரவு அளித்தனர்.
ஆனால் அதிமுக தொண்டர்களும் பொது மக்களும் சசிகலாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவருக்கு ஆதரவு அளித்த அமைச்சர்களும், எம்எல்ஏ க்களும் தொகுதிக்குள் நுழைய முடியாமல் தவித்தனர். எங்கு சென்றாலும் பொது மக்கள் அவர்களை ஓடஓட விரட்டி அடித்தனர்.
இதனால் நொந்துபோன அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் கடந்த சில நாட்களாக தெதாகுதிப்பக்கம் செல்லாமல் வீட்டுக்குள்ளளேயே முடங்கி கிடந்தனர். கொஞ்சம் கொஞ்மாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனை தற்போது அமைச்சர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

திருச்சி மலைக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சிக்கு வந்திருந்தார்.

விழா நடைபெறும் இடத்திற்கு சென்ற வெல்லமண்டி நடராஜனை திடீரென வழிமறித்த டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள், அவர் பதவி விலக வேண்டும் எனக் கோரி அவரிடமே மனு அளித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதற்கு வெல்லமண்டி நடராஜன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அமைச்சரை முற்றுகையிட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

இதுநாள்வரை அதிமுக தொண்டர்களிடம் மாட்டிக் கொண்ட அமைச்சர் தற்போது டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடம் மாட்டிக் கொண்டார். எங்கே போனாலும் இப்படி விரட்டுராங்களே என நொந்துபோன அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அங்கிருந்து தப்பி ஓடினார்.
